முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் புதிய மரபணு மாறிய கொரோனா கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மேற்குவங்கத்தில் பி.1.618 என்ற புதிய மரபணு மாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை வீசுகிறது. ஏற்கனவே பி.1.617 என்ற இரட்டை மரபணு மாற்றம் கண்ட கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது. மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில் இரண்டாவதாக பி.1.618 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது முதன்முதலாக 2020 அக்டோபரில் மேற்கு வங்கத்தில் ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலுள்ள ஸ்பைக் புரோட்டின் எச்146, ஒய்145 என்ற இரண்டு முறை மரபணு மாற்ற மடைந்துள்ளது. இது இயற்கையாக நம் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. மேற்கு வங்கத்தில் பி.1.618 வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து