முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை நதிக்குள் ஜீப் கவிழ்ந்து விபத்து: 10 பயணிகள் மாயம்

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

பீகாரில் கங்கை நதியில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பில் பயணித்தவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். 

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பிபபல் உள்ள சாலையில் நேற்று காலை 15 பயணிகளுடன் ஜீப் சென்று கொண்டிருந்தது. தனப்பூர் - தியாரா பகுதிகளை இணைக்கும் பாலத்தின் மீது ஜீப் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதை தொடர்ந்து பாலத்தின் தடுப்புகளை இடித்துக் கொண்டு கங்கை நதிக்குள் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த அனைவரும் கங்கை நதியில் மூழ்கினர். உடனடியாக விபத்து நடத்த பகுதியில் இருந்த மக்கள் சில நதிக்குள் குதித்து ஜீப்பில் சிக்கியவர்கள் சிலரை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், ஜீப்பில் பயணித்தவர்களில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், எஞ்சிய 10 பேர் நதியில் மூழ்கினர். இதையடுத்து, மாயமான 10 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து