முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா: ஆஸ்பத்திரியில் அனுமதி

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் அனைவரையும் பாதித்து வருகிறது.  பொதுவெளிக்குத் தேவையின்றி வருதல், முகக்கவசம் உள்ளிட்டவை கொரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், பொதுவாழ்வில் உள்ள வி.ஐ.பி.க்கள் இதைத் தவிர்க்க இயலாமல் போகிறது. கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள், வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தேர்தல் முடிவு தெரியும் முன்னரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகள் இருந்தததால் சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்து கொண்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை, ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது டுவிட்டர் பதிவில் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று அந்த பதிவில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து