fire-2021-04-23

மகராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

மகராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தாக்குதல் மிக மோசமாக இருக்கிறது. அனைத்து ஆஸ்பத்திரிகளும் அங்கு நிரம்பி வழிகின்றன. போதிய ஆக்சிஜன் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் தொடர்ந்து பலரும் பலியாகி வருகின்றனர்.  

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மகராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 24 பேர் உயிர் இழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 கொரோனா நோயாளிகள் உயிர் இழந்து உள்ளனர். 

மும்பைக்கு அருகே பல்கார் மாவட்டம் உள்ளது. இங்குள்ள விரார் நகரில் விஜய் வல்லாப் என்ற தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது. இங்கு கொரோனாவுக்காக சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர். 90 கொரோனா நோயாளிகள் சிக்சை பெற்று வந்தார்கள். அவர்களில் உடல் நிலை மோசமாக இருந்த 16 பேர் தீவிர சிகிச்சை வார்டில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த வார்டு 2-வது மாடியில் இருந்தது. நேற்று அதிகாலை 3.15 மணிக்கு அந்த வார்டில் திடீரென தீப்பற்றியது. அப்போது 2 நர்சுகள் மட்டும் பணியில் இருந்தனர். தீ பிடித்ததும் அவர்கள் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் வார்டு முழுவதும் தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் படுக்கையில் இருந்த நோயாளிகள் சிக்கிக் கொண்டனர். ஏற்கனவே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்த அவர்களால் உடனே எழுந்து வெளியே ஓட முடியவில்லை.  அவர்கள் அனைவரையும் தீ சூழ்ந்து கொண்டது. மேலும் வார்டு முழுவதும் புகை பரவியது. அதில் சிக்கிக் கொண்ட 13 நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிர் தப்பினார்கள்.  தீவிர சிகிச்சை வார்டு அருகே உள்ள மற்ற வார்டுகளிலும் கொரோனா நோயாளிகள் இருந்தனர். அவர்கள் உடனடியாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.  தீப்பற்றியது பற்றி அறிந்து தீயணைப்புப்படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் வார்டு முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. ஆஸ்பத்திரியில் ஆபத்தான கட்டத்தில் இருந்த சில நோயாளிகள் உள்பட 21 பேரை மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மீதி உள்ள நோயாளிகளுக்கு தொடர்ந்து அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீப்பிடித்ததற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. அந்த வார்டில் ஏ.சி. எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அகமதாபாத்தில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். கடந்த மாதம் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இதே போல தீ விபத்து ஏற்பட்டு 11 கொரோனா நோயாளிகள் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. 


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து