Kasimeddu-market 2021 04 11

Source: provided

சென்னை : இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி நேற்று சென்னை காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. சென்னையில் மிகப்பெரிய மீன்பிடி சந்தையான காசிமேடு துறைமுகத்தில், மீன் வாங்குவதற்காக நேற்றுஅதிகாலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும், மீன் வாங்குவதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளனர். இதனால் காசிமேடு மீன் சந்தையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து