முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’: தமிழக அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு அவசர உதவிக்கு 104-ஐ அழைக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்தொற்றின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும், நாளுக்குநாள் தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கோவிட்-19 சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த நிலையில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆக்சிஜன் தேவைக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து