முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் 7-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு நடக்கிறது

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 7-வது கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. 

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 223 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.  இந்நிலையில், வரும் 26-ம் தேதி 36 தொகுதிகளில் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தாமன், தக்ஷின் தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. 

பொதுவாக, வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும். ஆனால், கொரோனா பிரச்சினையால் 72 மணி நேரத்துக்கு முன்பே பிரச்சாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 36 தொகுதிகளிலும் மாலை 6.30 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.

தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடத்துவதை கைவிட்டுள்ளன.

பிரதமர் மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பொதுக்கூட்டங்களை ரத்து செய்து விட்டனர். பிரதமர் மோடி நேற்று முன்தினம்  4 மாவட்ட வாக்காளர்களிடையே காணொலி காட்சி மூலம் பிரச்சாரம் செய்தார்.  இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 29-ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து