முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. 

குறிப்பாக, டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்ப்வங்களும் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகம் சீராக கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.  சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் நாடுகளில் இருந்தும் மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த இறக்குமதி வரி ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதே போல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜன், ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள், கொரோனா தடுப்பூசி இறக்குமதி வரி ரத்து அடுத்த 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து