முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவி ஏற்றுக்கொண்டார்

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட என்.வி.ரமணா சுப்ரீம் கோர்ட்டின் 48-வது தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். 

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த பாப்டேவின் பதவி காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது.  சுப்ரீம் கோர்ட்டின் 47-வது தலைமை நீதிபதியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி எஸ்.ஏ. பாப்டே பதவி ஏற்றார். இவர் அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழக்கு விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்தினார். பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, பாப்டே சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பணியில் இருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இது பற்றி கருத்து தெரிவித்த அவர், சிறப்பாக பணியாற்றி திருப்தியாக ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட என்.வி. ரமணா சுப்ரீம் கோர்ட்டின் 48-வது தலைமை நீதிபதியாக நேற்று பதவி ஏற்றார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று  எளிமையாக நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடிக்கும் வகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமையாக நடந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.  சுப்ரீம் கோர்ட்டு புதிய நீதிபதி என்.வி.ரமணா பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

விழாவுக்கு வந்த அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். புதிய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி வரை உள்ளது. அதுவரை பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து