முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் ரப்பர் படகு கவிழ்ந்து 130 பேர் பலி

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லிபியா : லிபியாவில் 130 பேருடன் சென்ற ரப்பர் படகு கடலில் கவிழ்ந்ததில், அனைவரும் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது.

34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்காலப் பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. இதனால் லிபியாவில் உள்ள வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக லிபியா மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இப்படி மேற்கொள்ளும் பல பயணங்கள், விபத்தில் முடிக்கின்றன. இந்நிலையில் லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து குழந்தைகள் உள்பட 130 பேர் ரப்பர் படகு மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், 130 பேர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தகவல் அறிந்து லிபியாவில் இயங்கி வரும் ஐரோப்பியாவின் கடல் மனிதாபிமான அமைப்பு, விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்றபோது ஒருவரைக் கூட உயிருடன் பார்க்க முடியவில்லை என கூறினர். இதனால், பயணம் செய்த 130 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து