முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் சந்தான கவுடர் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் எம்.சந்தானகவுடர் நுரையீரல் தொற்று காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்குவயது 65.

நுரையீரல் தொற்று காரணமாக, குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தானகவுடர் நேற்று முன்தினம் இரவு காலமானார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வரை சந்தானகவுடர் உடல்நிலை சீராகத்தான் இருந்துள்ளது, நள்ளிரவு 12.30 அளவில் திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டு சந்தானக்கவுடர் உயிரழந்தார் என்று மருத்துவர்கள் அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.  ஆனால், நீதிபதி சந்தானக்கவுடர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, அதுகுறித்து கருத்துக் கூற மருத்துவர்களும் மறுத்து விட்டனர். 

கடந்த 1958-ம் ஆண்டு மே 5-ம் தேதி கர்நாடகாவில் பிறந்த சந்தானகவுடர் வழக்கறிஞராக பட்டம் பெற்று கடந்த 1980-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தன்னை வழக்கறிஞராக பதிவு செய்தார். 2003-ம் ஆண்டு மே 12-ம் தேதி கர்நாடக ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக சந்தானகவுடர் நியமிக்கப்பட்டு, பின்னர் 2004, செப்டம்பரில் நிரந்தர நீதிபதியாக பதவி வழங்கப்பட்டது. 

அதன்பின் கேரள ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சந்தானகவுடர், 2016, ஆகஸ்ட் 1-ம் தேதி தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்பட்டார். 2016, செப்டம்பர் 22-ம் தேதி கேரள ஐகோர்ட்டின் தலைமை நீதிபதிபதியாக சந்தானகவுடருக்கு பதவி வழங்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 17-ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சந்தானகவுடர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து