முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதி உதவி வழங்கும் கூகுள் - சுந்தர் பிச்சை அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டிவிட்டது.

பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் பல மருத்துவமனைகள் திணறி வருகின்றன. 

கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு துணை நின்று தேவையான உதவியை அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளன. 

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து