முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கை : வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. 

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறி இருப்பதாவது:- 

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம். வாக்கு எண்ணிக்கை துவங்கும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஏஜென்டுகள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்க வேண்டும்.  வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

சராசரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.  பதிவான தபால் வாக்குகளை முதலில் 500, 500ஆக பிரித்து பிறகு எண்ணப்படும். குலுக்கல் முறையில் ஒரு தொகுதிக்கு 5 வி.வி.பேட் எந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரிபார்க்கப்படும். 

ஏப்ரல் 23-ந் தேதி வரை ஐந்து லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து