முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு, சத்தீஸ்கரை தொடர்ந்து டெல்லியிலும் தடுப்பூசி இலவசம்

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

டெல்லி : அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை இது போன்ற பல புகார்கள் எழுந்து வருகிறது.

இதனால் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த மே 1 முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இந்நிலையில், டெல்லி மாநிலத்தில் 18 க்கு வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும், தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதற்கு முன் தமிழகம், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து