முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக இலங்கை சென்றார் சீன ராணுவ அமைச்சர்

வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன ராணுவ அமைச்சர் இலங்கை சென்றார்.

சீன ராணுவ அமைச்சர் வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கை சென்றார். விமானம் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையம்  சென்ற அவரை இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா வரவேற்றார். அதனை தொடர்ந்து சீன ராணுவ மந்திரி வீ பெங்கே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌

பாதுகாப்பு ரீதியில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து சீன ராணுவ அமைச்சர் வீ பெங்கேவுடனான சந்திப்பு பலனளிக்கும் பேச்சுவார்த்தையாக அமைந்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து