முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் காங். வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

வருகிற ஜூன் 1-ம் தேதியுடன் 14-வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் நிறைவடைகிறது.  இதனால், கடந்த 6-ம் தேதி கேரள சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.  14 மாவட்டங்களை உள்ளடக்கிய கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2-ம் தேதி நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில், ஆளும் கம்யூனிஸ்டு, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் இடையே பெரும் போட்டி நிலவியது.  ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்துள்ளது.  அந்த கட்சியின் நிலாம்பூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக வி.வி. பிரகாஷ் போட்டியிட்டார்.  அவர், மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார்.  இந்த நிலையில், நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து