முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பொதுமுடக்கம் தேவையில்லை: பினராய்

வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

கேரளாவில் பொதுமுடக்கம் தேவையில்லை என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கேரளாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 35 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்புகளை முன்னிட்டு கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், கேரளாவில் பொது முடக்கம் தேவையில்லை, அதற்கு பதிலாக கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும், மே 2-ம் தேதி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்தக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், மாநிலத்தில் பொதுமுடக்கம் தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 70 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் மருந்தும், 30 லட்சம் டோஸ் கோவாக்சின் மருந்தும் வாங்குவதென்றும்  முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து