முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் : கேரள முதல்வர் பினராய் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக மே 4 முதல் 9-ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் ஒரே நாளில் மேலும் 38,607 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த அந்த மாநில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி தேர்தல் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறேன். கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் மே 4 முதல் 9-ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.  இதுதொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து விதமான பணிகளும் நடந்து வருவதாக குறிப்பிட்ட பினராய் விஜயன், மாநிலத்தில் புதிய ஆக்சிஜன் ஆலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து