முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கருத்து கணிப்புகள் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழகத்தில் கருத்து கணிப்புகள் வெற்றி பெற்றதில்லை. 2016-ல் கருத்து கணிப்புகள் பொய்யாகியுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார். 

மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் 2-வது டோஸ் தடுப்பூசியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செலுத்தி கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், 

தடுப்பூசி எடுத்து கொள்வதில் மக்களிடையே நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது, மக்கள் தாமாகவே முன் வந்து தடுப்பூசியை எடுத்து கொல்கிறார்கள், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள், மருத்துவர்கள், காவல்துறை உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் மகத்தான சேவையை ஆற்றி வருகிறார்கள்,

மதுரை மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது, கொரோனா தொற்றை கண்டறிய அதிக அளவில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது, தடுப்பூசி பற்றாக்குறை என்பது இல்லை, மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும், தடுப்பூசி மட்டுமே மிகப்பெரிய ஆயுதம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியால் மட்டுமே முடியும், ஆக்ஸிசன் பற்றாக்குறை என்பது இல்லை, 

கருத்து கணிப்புகள் தமிழகத்தில் வெற்றி பெற்றதில்லை. 2016-ல் கருத்து கணிப்பில் தி.மு.க. அதிக. இடங்களில் வெற்றிபெறும் என்று வெளியிட்டது ஆனால் அதில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம்கருத்துக்கணிப்பு பொய்யாகி விட்டது. தமிழகத்தில் ஒருபோதும் கருத்துக்கணிப்பு வெற்றி பெற்றதில்லை. கருத்து கணிப்பை வைத்து தி.மு.க.வும் அவர்களது கூட்டணி கட்சிகளும் 2 நாட்களுக்கு மகிழ்ச்சி அடையலாம், தமிழக மக்களின் மனதை யாரும் கணித்துவிட முடியாது.

நிச்சயமாக அ.தி.மு.க. வெற்றி பெறும். முதல்வர் மக்களுக்கு செய்த சேவைக்கு நிச்சயமாக வெற்றி என்ற தீர்ப்பு கிடைக்கும். முதலமைச்சர் சேவை வானளாவிய சேவையாகவும் அந்த சேவைக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். மக்களின் வாக்குகள் மட்டுமே வெற்றியை தரும். அ.தி.மு.க. சாமானியர்களால் உருவாக்கப்பட்டது, முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார்.

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மக்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளனர். இந்த இயக்கத்தை 17.10.1972 ஆண்டில் எம்.ஜி.ஆர்.தோற்றுவித்தார் தற்போது 49 ஆண்டுகள் ஆகியுள்ளது இந்த 49 வருட அரசியல் வரலாற்றில் அதிமுக மாபெரும் வெற்றி சகாப்தம் படைக்கும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து