முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் ரமலான் நோன்பு துறந்த சிறிது நேரத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் உயிரிழந்த பரிதாபம்

சனிக்கிழமை, 1 மே 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் ரமலான் நோன்பு துறந்த சிறிது நேரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.  புனித ரமலான் மாதத்தினை ஒட்டி நேற்று முன்தினம் மாலை முஸ்லிம் மக்கள் நோன்பு துறந்தனர். இதன்பின்னர் 6.50 மணியளவில் மருத்துவமனைக்கு வெளியே திடீரென கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  70 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன.  மருத்துவ துறையை சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அருகேயுள்ள மாவட்டங்களில் இருந்து தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.  பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களில் பலர் பல்கலை கழக நுழைவு தேர்வு எழுதி விட்டு, நோன்பு துறப்பதற்காக மருத்துவமனையை சுற்றியிருந்த சிறிய உணவு விடுதிகளில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து