முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி உற்சாகம் கொரோனா பரவலுக்கு காரணமாக கூடாது: தொண்டர்களுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சனிக்கிழமை, 1 மே 2021      தமிழகம்
Image Unavailable

வெற்றி பெற்ற உற்சாகம், எந்தவிதத்திலும் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்க கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் இன்று (2-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை மூலம் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் வெற்றி கொண்டாட்டங்கள் இருக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல வேண்டும்.  இந்த கட்டுப்பாட்டுகளையும், கோட்பாடுகளையும் அலட்சியம் செய்யாமல் அனைத்து கட்சிகளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். முகாம்களுக்கு வேறு யாரும் செல்ல வேண்டாம்.  தற்பொழுது உள்ள கொரோனா பரவலால் மக்கள் அச்சம் அடைந்து இருக்கும் நேரத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற உற்சாகம், எந்த விதத்திலும் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்க கூடாது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து