முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்தியாவில் பேரழிவான கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  இந்த சூழலில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட மருந்துகள், ஆக்சிஜன் உதவி கிடைக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்நிலையில் ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்படி பிரதமர் மோடி நிபுணர்களை சந்தித்து ஆக்சிஜன் மற்றும் மருந்து கிடைப்பது குறித்து ஆய்வு செய்தார்.  மேலும் கொரோனா தொற்றுநோய் தொடர்பாக மனிதவள நிலைமை மற்றும் அதை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் பிரதமர் மோடி மதிப்பாய்வு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து