Oxygen 2021 04 30

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் பலியாகி வருவது குறித்து மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி புகார் கூறி வருகிறார். இச்சூழலில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மத்திய அரசின் பொது நிறுவனத்தைச் சேர்ந்த 120 டன் ஆக்சிஜன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆறு இரும்பு கொள்கலன்கள், ரயிலில் ஏற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

மத்திய ரயில்வே துறை சார்பில் முதன்முறையாக மேற்கு வங்கத்தின் துர்காபூரிலிருந்து டெல்லிக்கு க்ரீன் காரிடார் எனும் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் எந்த தடையும் இன்றி இந்த ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் துர்காபூரின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் மம்தா, இந்த கொடும் கொரோனா காலத்திலும் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை மாறவில்லை. துர்காபூரின் செயில் நிறுவனத்தின் ஆக்சிஜனை திடீரென மத்திய அரசு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அனுப்புகிறது. இதை கண்டித்து நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்திருந்தார்.

செயில் அதிகாரிகள் தரப்பில், கொரோனா இரண்டாவது அலையில் செயிலின் இருந்து இதுவரை 2,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரப் பிரதேசம் மற்றும் மகராஷ்டிர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து