முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வால்பாறையில் அ.தி.மு.க. வெற்றி வாகை சூடியது

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை : கோவை வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.கே. அமுல்கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

தமிழகம்  முழுவதும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.

அதேபோல் வால்பாறை தனித் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், 19 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றது. இத்தொகுதியில் மொத்தமே 6 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் டி.கே. அமுல்கந்தசாமி 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

டி.கே.அமுல்கந்தசாமி (அ.தி.மு.க.) - 66,474 வாக்குகளும்,  ஆறுமுகம் (சி.பி.ஐ.) - 53,309 வாக்குகளும் பெற்றிருந்தனர். வெற்றி வித்தியாசம் 13,165 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து