முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு: அமைச்சர் அனில் விஜ் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் கொடிய இரண்டாவது அலையை தடுக்க அரியானா அரசு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மாநில உள்துறை மற்றும் சுகாதார அமைச்சர் அனில் விஜ் வெளியிட்டுள்ளார். 

குர்கான், பரிதாபாத், பஞ்ச்குலா, சோனிபட், ரோஹ்தக், கர்னல், ஹிசார், சிர்சா, மற்றும் பதேஹாபாத் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை அரசு வார இறுதி ஊரடங்கை அறிவித்தது.

இந்த மாவட்டங்கள் மாநிலத்தின் கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிக பங்களிப்பு செய்கின்றன. மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் மனோகர் லால் கட்டர் அதிகாரிகளிடம் மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற மருத்துவ சாதனங்கள் அல்லது கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் வைரஸ் தடுப்பு ஊசி ஆகியவற்றில் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார். 

படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காத நிலையில், டெல்லியை விட மாநிலத்தின் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து