முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்படியும் ஒரு வரலாற்று சாதனை: 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் எடப்பாடி அமோக வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி 92,868 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் சம்பத்குமார்,  அ.ம.மு.க. சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா ஆகியோர் போட்டியிட்டனர்.

தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட  எடப்பாடி பழனிசாமி, காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். பிறகு வாக்குகள் அடுத்தடுத்து எண்ணப்பட்டதில்  92,868 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க.வின் சம்பத்குமாரை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் எடப்பாடி தொகுதியில் 6-வது முறையாக போட்டியிட்ட பழனிசாமி, 5-வது முறையாக வென்றுள்ளார்.

இதே போல் போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெற்றுள்ளார். கோபி சட்டமன்ற தொகுதியில் கே.ஏ. செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். மதுரை மேற்கில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூவும், திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி. உதயகுமார், மேலூர் தொகுதியில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழி சேகர் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும் ஆவடி தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜன் தோல்வியை தழுவினார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியும் தோல்வியை தழுவியுள்ளார். இந்த தேர்தலின் முழு முடிவுகள் இன்று பிற்பகலில்தான் சரியாக தெரியவரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து