Corona 2021 03 17

Source: provided

காத்மாண்டு : நேபாளத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 7 ஆயிரத்து 137- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய நேற்று 16,147 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்புடன் 48,711- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து 1,612- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 67- பேரும், இதுவரை 3,325- பேரும் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளதால், இந்தியாவுடனான 22 எல்லை முனைகளை மூடுவதாக நேபாள அரசு அண்மையில் அறிவித்தது. இந்தியா - நேபாளம் இடையே 13 எல்லை முனைகளில் மட்டுமே தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து