முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: புதிய முதல்வராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுகிறார்: கவர்னர் மாளிகையில் 7-ந்தேதி பதவி ஏற்கிறார்

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இன்று தி.மு.க.எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவராக (முதல்வராக) மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அதையடுத்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோருவார். கவர்னர் அழைப்பு விடுத்தப்பிறகு வரும் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் இந்த விழா எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தி.மு.க. 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக (சட்டமன்ற குழுத் தலைவராக ) எம்.எல். ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதன் பிறகு மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்குவார்.

வருகிற 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும். இது கொரோனா காலம் என்பதால் பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று காலை மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றுக் கொண்டார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். எதிர் வீட்டில் உள்ள தனது குடும்ப நண்பரையும் ஸ்டாலின் தீடீரென சந்தித்து பேசினார். மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் போது அவரது அமைச்சரவையும் பதவியேற்கிறது. 50 சதவீதம் மூத்த தலைவர்களுக்கும் 50 சதவீதம் புது முகங்களுக்கும் அவர் தனது மந்திரி சபையில் வாய்ப்பளிப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளனர். குறிப்பாக செந்தில் பாலாஜி போன்றவர்களுக்கு மந்திரிசபையில் ஸ்டாலின் இடமளிக்கவுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை அடுத்து அண்ணா அறிவாலயம் களைகட்டி காணப்படுகிறது. புதிய முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பிரதமர் மோடி, ரஜினி காந்த் உள்ளிட்ட பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சனும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து