முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை வரை தொடரும்: சீரம் நிறுவனம் தகவல்

திங்கட்கிழமை, 3 மே 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இந்தியாவில் ஜூலை மாதம் வரை தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

கொரோனா 2-வது அலையில் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் லண்டனில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்த அதார் பூனாவாலா கூறியதாவது:-

தற்போது மாதம் ஒன்றுக்கு சீரம் நிறுவனம் 6 முதல் 7 கோடி தடுப்பூசி டோஸ்களை மட்டுமே தயாரித்து வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் அது 10 கோடியாக உயர்த்தப்பட்ட பின்னர் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும்.

ஜனவரி மாதம் புதிய கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்ட நிலையில், இரண்டாவது அலையை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் நோக்கத்துடன், சீரம் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு 3000 கோடி முன்பணத்துடன் கடந்த மாதம் ஆர்டர் வழங்கியது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்த விமர்சகர்களால் நான் மிகவும் அநியாயமாகவும் தவறாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து