முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள்

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள் விவரம் குறித்து பார்ப்போம்.

1. தியாகராயநகரில் அ.தி.மு.க சத்யநாராயணனை விட 137 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.கவின் கருணாநிதி வெற்றி பெற்றார்.

2. மொடக்குறிச்சியில் தி.மு.க சுப்புலட்சுமி ஜெகதீசனை விட 281 வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜகவின் சரஸ்வதி வெற்றி பெற்றார்.

3. தென்காசியில் அ.தி.மு.க செல்வ மோகன் தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸின் பழனி நாடார் வெற்றி பெற்றார்.

4. மேட்டூரில் தி.மு.கவின் சீனிவாச பெருமாளை விட 656 வாக்குகள் கூடுதலாக பெற்று பாமகவின் சதாசிவம் வெற்றி பெற்றார்.

5. காட்பாடியில் அ.தி.மு.கவின் வி.ராமுவை விட 746 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.கவின் துரைமுருகன் வெற்றி பெற்றார்.

6. கிருஷ்ணகிரியில் தி.மு.கவின் செங்குட்டுவனை விட 794 வாக்குகள் கூடுதலாக பெற்று அ.தி.மு.கவின் அசோக் குமார் வெற்றி பெற்றார்.

7 விருதாச்சலத்தில் பாமக கார்த்திகேயனை விட 862 வாக்குக்கள் கூடுதலாக பெற்று காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

8. நெய்வேலியில் பாமக ஜெகனை விட 977 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.கவின் சுபா ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

9. ஜோலார்பேட்டையில் அ.தி.மு.கவின் கே.சி.வீரமணியை விட 1091 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.கவின் தேவராஜி வெற்றி பெற்றார்.

10. கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க குறிஞ்சிபிரபாகரனைவிட 1095 வாக்குகள் கூடுதலாக பெற்று அ.தி.மு.கவின் தாமோதரன் வெற்றி பெற்றார்.

11. அந்தியூரில் அ.தி.மு.க சண்முகவேலை விட 1275 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.கவின் வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார்.

12. திருமயத்தில் அ.தி.மு.க பி.கே.வைரமுத்துவை விட 1382 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.கவின் ரகுபதி வெற்றி பெற்றார்.

13. தாராபுரத்தில் பாஜக எல்.முருகனை விட 1393 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.கவின் கயல்விழி வெற்றி பெற்றார்.

14. உத்திரமேரூரில் அ.தி.மு.கவின் சோமசுந்திரத்தை விட 1622 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.கவின் சுந்தர் வெற்றி பெற்றார்.

15. பொள்ளாச்சியில் தி.மு.க வரதராஜனைவிட 1725 வாக்குகள் கூடுதலாக பெற்று அ.தி.மு.கவின் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றார்.

16. கோவை தெற்கில் மநீம கமல்ஹாசனை விட 1728 வக்குகள் கூடுதலாக பெற்று பாஜக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

17. கூடலூரில் தி.மு.க காசிலிங்கத்தை விட 1945 வாக்குகள் கூடுதலாக அ.தி.மு.க பொன் ஜெயசீலன் வெற்றி பெற்றார்.

18. திருப்போரூரில் பாமக ஆறுமுகத்தை விட 1947 வாக்குகள் கூடுதலாக பெற்று விசிக பாலாஜி வெற்றி பெற்றார்.

19. ராசிபுரத்தில் அ.தி.மு.க சரோஜாவை விட 1952 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.கவின் மதிவேந்தன் வெற்றி பெற்றார்.

20. மயிலத்தில் தி.மு.க மாசிலாமணியை விட 2230 வாக்குகள் கூடுதலாக பெற்று பாமகவின் சிவக்குமார் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து