EPS-OPS 2021 05 03

Source: provided

சென்னை : வரும் வெள்ளிக்கிழமை தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாள் இ.பி.எஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தலைமைக் கழகத்தில் வருகின்ற வெள்ளிக் கிழமை (7.5.2021) மாலை 4.30 மணிக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து