முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடர் 24-வது லீக் ஆட்டம்: ஐோஸ் பட்லர் அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி

திங்கட்கிழமை, 3 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டெல்லி : நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 24-வது லீக் ஆட்டத்தில் பட்லரின் அதிரடி ஆட்டத்தால ஐதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது.

டெல்லியில்  நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களை குவிக்க, இமாலய இலக்கை அடைய முடியாமல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

ஜோஸ் பட்லர் 

டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல் 2021 தொடர்ன் 24-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களை குவிக்க, இமாலய இலக்கை எதிர்த்து ஆடிய ஐதராபாத் அணி 165/8 மட்டுமே எடுத்தது. ஜோஸ் பட்லர் 11 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 64 பந்துகளில் 124 ரன்களை விளாசினார். சஞ்சு சாம்சன் வந்தவுடனேயே முதல் பந்திலேயே மிட்விக்கெட்டில் மெஜஸ்டிக் சிக்ஸ் அடித்து தொடங்கி 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்தார்.

பட்லர் - சஞ்சு ...

பட்லரும் சஞ்சுவும் சேர்ந்து 82 பந்துகளில் 2வது விக்கெட்டுக்காக 150 ரன்களை விளாசினர். 39 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் அரைசதம் கடந்த பட்லர். அடுத்த 17 பந்துகளில் மேலும் 50 ரன்களை விளாசி 56 பந்துகளில் சதம் கண்டார். பட்லர், சாம்சன் 150 ரன்கள் கூட்டணியில் பட்லரின் பங்களிப்பு மட்டும் 94 ரன்கள். கடைசி 25 பந்துகளில் 74 ரன்கள் என்றால் புக் கிரிக்கெட்டில் கூட இப்படி அடிக்க முடியாது. 7 ரன்களில் ரஷீத் கானை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பிளம்ப் எல்.பி. ஆனார் பட்லர், ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை, இதற்கு முன்னதாக ஜைஸ்வாலுக்கு ரிவியூ கேட்டு சூடுபட்டதால் பட்லரின் உண்மையான அவுட்டுக்கு ரிவியூ கேட்காமல் விட்டனர், ஆனால் இது பிளம்ப் அவுட். இதுதான் ராஜஸ்தானின் லக்.

சிக்ஸ் - பவுண்டரி... 

முதல் முறையாக டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 7 ரன்களில் தப்பிய பட்லர் 33 பந்துகளில் 35 என்று தத்தினார். ஆனால் அதன் பிறகு இப்படியெல்லாம் ஆடினால் சரிப்பட்டு வராது என்று கலீல் அகமெட்டை பவுண்டரிக்கு அனுப்பினார், பிறகு சந்தீப் சர்மாவை ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 39 பந்துகளில் அரைசதம் எடுத்தார் பட்லர். அதன் பிறகு அவர் திரும்பிப் பார்க்கவில்லை அடுத்த 8 பந்துகளில் மீண்டும் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசினார். 

முதல் டி-20 சதம்

நபி வீசிய 1வது ஓவரில் 21 ரன்கள். புவனேஷ்வர் குமார் விஜய் சங்கர் பந்துகளில் நான்குகளை விரட்டி 55 பந்துகளில் 99 ரன்களை விளாசினார். சிங்கிளில் தன் முதல் டி20 சதத்தை எடுத்தார். பிறகு 19வது ஓவரில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி என்று ஷர்மாவை வெளுத்து வாங்கினார் 124 ரன்கள் எடுத்து இத்துடன் விடுகிறேன் என்று தானே அவுட்டாகி விட்டுச் சென்றார்.

கார்த்திக் தியாகி வீசிய சில பந்துகள், முதல் ஓவர் உட்பட மணீஷ் பாண்டேவுக்கு குடச்சல் கொடுத்த வேகமாகும்.  பாண்டேவுக்கு. பிறகு தியாகியையும் கிறிஸ் மோரிசையும் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசினார். 20 பந்துகளில் 31 எடுத்த இவரை கட்டர்ஸ் புகழ் முஸ்தபிசுர் ரஹ்மான் ஸ்லோ பந்தில் பவுல்டு செய்தார்.

கேன் வில்லியம்சன்...

சேட்டன் சகாரியாவை ஜானி பேர்ஸ்டோ முதல் 3 பந்துகளில் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகள் விளாசினார். இவரும் 21 பந்தில் 30 எடுத்து ராகுல் திவேத்தியாவிடம் வெளியேறினார். 57/0 என்ற நிலையிலிருந்து 70/2 ஆனது. வில்லியம்சன், விஜய் சங்கரை சகாரியா மற்றும் திவேத்தியா கட்டிப் போட்டனர். 8 ரன்களில் சங்கர் வெளியேறினார். 20 பந்தில் 21 ரன்களில் கேன் வில்லியம்சன் தியாகி பந்தில் வெளியேறினார்.முகமது நபி, திவேத்தியாவை 2 மிகப்பெரிய சிக்சர்களுடன் கொஞ்சம் ஆறுதல் அளித்தார். 

ஐதராபாத் தோல்வி

கேதார் ஜாதவ் திவேத்தியாவை சிக்சர் அடித்து தொடங்கினார். அப்துல் சமத் பெரிய ஹிட்டர் என்ற பெயர் பெற்றவர் வந்தவுடன் சிக்ஸ் விளாசினார், அதன் பிறகு பீல்டர் கைகளில் அடித்துக் கொண்டிருந்தார். ஸ்லோ பந்துகள் சன் ரைசர்ஸ் ஹிட்டர்களை சொத்தையாக்கியது. பிறகு மோரிஸ் அப்துல் சமத், ஜாதவ் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார். 165/8 வரை தாக்குப் பிடித்தனர். இமாலய இலக்கை அடைய முடியாமல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து