முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி பல்டி

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.  எனினும், தொற்று பரவல் குறையாமல் உள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த யோசித்து வரும்  மத்திய அரசு, பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் பாதிக்கப்படாத அம்சத்துடன் கூடிய ஊரடங்கு மட்டுமே கொரோனா பரவலை தடுப்பதற்கான ஒரே வழி. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனாவால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர் என்று தனது டுவிட்டர் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து