முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்: சீரம் நிறுவன அதிகாரி தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      இந்தியா
Image Unavailable

மத்திய அரசு ஆர்டர் கொடுக்காததால் இந்தியாவில் மேலும் மூன்று மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும் என்று சீரம் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனாவுடன் போராடி வரும் இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கோவாக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்டை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும் தயாரித்து வருகின்றன. இந்த இரு நிறுவனங்களிடமும் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யும் மத்திய அரசு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.

தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்தும் விதமாக சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி டோஸ் மருந்துகளையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் மருந்துகளையும் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. ஆனால் இது போதுமானது அல்ல. தேவையான டோஸ்கள் இல்லாததால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தையும் மாநிலங்கள் தொடங்கவில்லை. அத்துடன் பல மாநிலங்கள் தடுப்பூசி மருந்து இல்லாமல் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.

சீரம் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா, தற்போது மாதத்திற்கு 7 கோடி டோஸ் வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உற்பத்தியை 10 கோடியாக உயர்த்தவுள்ளோம். இதைவிட அதிகமாக உற்பத்தி செய்ய நாங்கள் தயாராக இருந்தாலும், மத்திய அரசு ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை. இப்போதுதான் சில மாநில அரசுகள் ஆர்டர் கொடுத்திருக்கின்றன. உற்பத்தியை விரிவாக்கம் செய்ய இருப்பதால், இன்னும் 3 மாதங்களில் தட்டுப்பாடு சரியாகும் என தெரிவித்துள்ளார். தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தியை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து