முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்கத்தில் வன்முறை: 6 பேர் பலி: உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு முடிவுகள் வெளியான பிறகு பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிறன்று அறிவிக்கப்பட்டது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும்போது மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.க. தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இத்தாக்குதலில் தங்கள் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் என 6 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டதாகவும் பா.ஜ.க.வினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் என சில பதிவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மேற்கு வங்க அரசிடம் உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. 

இதற்கிடையில் திரிணாமூல் தொண்டர்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் வன்முறையை தூண்ட வைக்கும் பா.ஜ.க.வினரின் முயற்சிகளுக்கு பலியாகி விடக் கூடாது என்றும் முதல்வர்  மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையில், இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க கவர்னரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து