முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு விலை படிப்படியாகக் குறைந்து ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, ஏப்ரல் 6 முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. குறிப்பாக, ஏப்ரல் 9-ல்ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 21-ல் ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வந்தது. 

இந்த நிலையில், சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயா்ந்து, ரூ.4,452 ஆக இருந்தது.  வெள்ளி கிராமுக்கு 1.80 பைசா உயா்ந்து, ரூ.75.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1800 உயா்ந்து ரூ.75,300 ஆகவும் இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து