முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்சாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார். தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. இந்த முறை ஆட்சியமைக்கிறது. வரும் 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்துக்களையும் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.   

முன்னதாக தி.மு.க. வெற்றி குறித்து விஜயகாந்த் தனது டுவிட்டரில், சட்டசபை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து