முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் தடுப்பூசி டோஸ்கள்: மத்திய அரசு தகவல்

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

தமிழகத்தின் வசம் 2,56,493 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாகவும், 1,00,000 தடுப்பூசி டோஸ்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:-

அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 28,90,360 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது. இதுவரை, 17.15 கோடி (17,15,42,410) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. நேற்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 16,26,10,905 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.  89,31,505 கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டுக்கு இதுவரை 71,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 8.83 சதவீதம் வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 68,47,457 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2,56,493 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன. 1,00,000 தடுப்பூசி டோஸ்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளன. 

புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கு இதுவரை 3,97,130 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 1.61 சதவீதம் வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 2,10,379 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,86,751 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரிவசம் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து