முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வு குழுவுக்கு கோரிக்கை

வியாழக்கிழமை, 6 மே 2021      உலகம்
Image Unavailable

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வு குழுவுக்கு பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளது. 

ஐ.பி.எல் 2021 தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் எப்போது நடக்கும் என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான மும்முரத்தில் பி.சி.சி.ஐ உள்ளது.

தகவல் இல்லை...

இந்நிலையில் இந்திய தேர்வுக்குழு அடுத்த வாரத்தில் கூடி முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளது. ஐ.பி.எல் 2021 தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை கண்டிப்பாக நடத்துவோம் என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. ஆயினும் அடுத்தடுத்த தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் எப்போது நடக்கும் எங்கே நடக்கும் என்பது குறித்த தெளிவு தற்போது இல்லை.

சௌதாம்டனில்...

ஆயினும் அடுத்ததாக அடுத்த மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சௌதாம்டனில் நடைபெறவுள்ளது. இதற்கென அடுத்தகட்ட பணிகளில் பி.சி.சி.ஐ ஈடுபட்டுள்ளது. இந்திய அணி முன்னதாகவே சௌதாம்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

பி.சி.சி.ஐ அறிவுறுத்தல்

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணியை தேர்ந்தெடுக்கும் அடுத்த பணி பி.சி.சி.ஐக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்திய தேர்வுக்குழு கூடவுள்ள நிலையில் 22 முதல் 24 வீரர்களை கொண்ட குழுவை தேர்ந்தெடுக்க பி.சி.சி.ஐ தேர்வுக்குழுவை அறிவுறுத்தியுள்ளது.

இரு அணி விவரங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் போன்றவற்றிற்கான அணியை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தவாரம் கூடவுள்ள தேர்வுக்குழு ஆலோசனைக்கு பிறகு இந்த இரு அணி விவரங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தேர்ந்தெடுப்பதில் சிக்கல்

இந்திய அணியில் சிறப்பான பௌலிங் மற்றும் பேட்டிங் யூனிட் உள்ளதாகவும் அதனால் அணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் முன்னதாக ஐ.சி.சி மற்றும் நியூசிலாந்து பௌலர் கொலின் டீ கிராண்ட்ஹோம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுக்குழு வீரர்கள் தேர்வை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து