முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவால் பாதித்த மக்களுக்கு 'பதான் ' சகோதரர்கள் உதவிக்கரம்

வியாழக்கிழமை, 6 மே 2021      விளையாட்டு
Image Unavailable

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆல்ரவுண்டர்கள் மற்றும் சகோதரர்களான இர்பான் மற்றும் யூசுப் பதான்கள் தெற்கு டெல்லியில் கொரோனாவால் பாதித்த மக்களுக்கு இலவச உணவை தங்கள் அகாடமி மூலம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதிகரிப்பு...

கொரோனா 2-ம் அலையில் டெல்லி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, நாளொன்றுக்கு 23,000 கொரோனா தொற்றுகள் உருவாகின்றன. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 2.1 கோடியாக அதிகரித்துள்ளது. மரணங்கள் 2.29 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இலவச உணவு 

இந்நிலையில் அயல்நாட்டு உதவிகள், தனிநபர்கள், நிறுவனங்கள் என்று இந்தியாவுக்கு கோவிட்-19 உதவிகள் குவிந்து வருகின்றன. இதில் தங்கள் சமூக வலைத்தளத்தில் இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோர் இலவச உணவு பற்றி கூறும்போது, “இந்தியா கொரோனா இரண்டாம் அலைப் பிடியில் சிக்கியிருக்கும் போது நாட்டு மக்களுக்கு உதவுவது எங்களது பொறுப்பு மற்றும் கடமையாகும். இதிலிருந்து உத்வேகம் பெற்ற கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்ஸ், தெற்கு டெல்லியில் கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு இலவச உணவு வழங்க முடிவெடுத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் 

இதற்கான தொலைபேசி எண்ணையும், கூகுள் படிவம் ஒன்றையும் இணைத்துள்ளனர், அதை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொண்டால் இலவச உணவு வீடு தேடி வரும் என்று தெரிவித்துள்ளனர். ரோடு சேஃப்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பிறகு இர்பான், யூசுப் பதான்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது.. சச்சின் டெண்டுல்கர், பத்ரிநாத் ஆகியோரையும் கோவிட் விட்டு வைக்கவில்லை.

இலவச முகக்கவசங்கள்

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் பதான் சகோதரர்கள் 4000 முகக்கவசங்களை இலவசமாக அளித்தனர், பதான் தந்தை மெஹ்மூத் கான் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவை தன் அறக்கட்டளை மூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து