முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் தலைசிறந்த வீரர்களான சச்சின் - விராட் கோலி குறித்து வெங்கடேஷ் பிரசாத் கணிப்பு

வெள்ளிக்கிழமை, 7 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த வீரர்களாக கருதப்படும் இந்தியாவின் சச்சின் மற்றும் விராட் கோலி குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கணித்துள்ளார்.

எதிரெதிரானவர்கள்....

இவர்கள் இருவர் குறித்து அவர் தெரிவித்ததாவது.,

இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா உற்பத்தி செய்த உலகத்தின் இரண்டு தலைசிறந்த பேட்ஸ்மென்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி. இருவரும் அபாரமான தனிப்பட்ட வீரர்கள். சச்சின் மிகவும் மென்மையான மனநிலைப் படைத்தவர் ஆனால் விராட் கோலி ஆக்ரோஷமானவர் ஆனால் கோலியின் இயல்பு இதுவல்ல என்கிறார் வெங்கடேஷ் பிரசாத்.

“களத்தில் மட்டும்தான் விராட் கோலி இப்படி, வெளியில் அவருமே அமைதியான ஒரு நபர்தான். களத்தில் அவர் அப்படியிருக்கக் காரணம் ஒவ்வொரு போட்டியையும் வென்றாக வேண்டும், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்ற நோக்கத்தினால்தான்.

வெளிக்காட்ட மாட்டார்

சச்சினும் அப்படித்தான் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைப்பவர், ஆனால் நாம் சச்சினிடம் பெரிய அளவில் உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பார்க்க முடியாது. அவர் டக் அடித்தாலும் சதம் அடித்தாலும் அவரை யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அவருக்கு அடிப்பட்டால் கூட உணர்ச்சியைக் காட்ட மாட்டார். 

ஆனால் விராட் கோலி தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்பவர். ஷார்ஜாவில் ஒரு முறை நன்றாக நினைவிருக்கிறது, வாசிம் அக்ரம் பந்தில் சச்சின் அடி வாங்கினார், ஹெல்மெட்டைப் பந்து தாக்கியது.. வாசிம் அக்ரமின் அந்தப் பந்து மணிக்கு 145 கிமீ வேகம் கொண்டது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை, அவர் அதைக் கணிக்கும்போது ஹெல்மெட்டைப் பந்து தாக்கிவிட்டது.

சிக்சருக்கு பறந்தது...

அப்போது லெக் அம்பயர் பக்கம் சென்று தன் தலையை மட்டும் ஆட்டினார். அவர் தன் ஹெல்மெட்டைக் கூட கழற்றவில்லை. பிறகு அடுத்த பந்துக்குத் தயாரானார். அது புதிய பந்து சச்சின் தொடக்க வீரர். 2வது பந்தும் நன்றாகக் குறிவைத்து வீசப்பட்ட பவுன்சர் தான் அது, இந்தப் பந்தும் சச்சின் தலையைக் குறிவைத்து வீசப்பட்டதுதான் ஆனால் இம்முறை பந்து சிக்சருக்குப் பறந்தது, இப்போதும் சச்சின் உணர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

முறைத்திருப்பார்...

இதே விராட் கோலியாக இருந்தால் அந்த சிக்சரை அடித்த பிறகு முஷ்டியை உயர்த்தியிருப்பார், பவுலரை முறைத்திருப்பார். இருவரும் இரு வித்தியாசமான கேரக்டர்கள், ஆனால் இருவருமே கிரிக்கெட் ஆட்டம் வளம்பெற மிக முக்கியமான வீரர்கள்” என்றார் வெங்கடேஷ் பிரசாத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து