முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னுதாரணமான ஷிகர் தவான்!

வெள்ளிக்கிழமை, 7 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிகக்க சிறப்பாக விளையாடி இருந்தார் தவான். அதோடு ஆக்ஸிஜன் வாங்க நிதியுதவியும் அவர் வழங்கி இருந்தார்.  

தற்போது தவான் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். முன்கள பணியாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. முடிந்த வரை எந்தவித தயக்கமும் இல்லாமல் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அது தான் கொரோனாவை நாம் வீழ்த்த பெரிதும் உதவும்” என அவர் தெரிவித்துள்ளார்.  

____________

பி.சி.சி.ஐக்கு ரோகித் பாராட்டு

பயோ பபுளில் இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல் தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மும்பை இன்டியன்ஸ் அணி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ மூலம் ரோகித் தெரிவித்ததாவது., 

“எதிர்பாராத விதமாக ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பார்த்தால் தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்த பி.சி.சி.ஐயின் முடிவு நல்லதொரு முடிவு என சொல்லலாம். அரசு சொன்ன விதிகளை பின்பற்றி கொரோனாவை விரட்டி அடிப்போம்” என ரோகித் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.  அவருடன் மும்பை இன்டியன்ஸ் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்த வீடியோவில் பேசி உள்ளனர். 

____________

ஸ்டாலினுக்கு அஸ்வின் வாழ்த்து

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. வெற்றிப் பெற்றது. இதனையடுத்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.  

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது., தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

_________

வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்

இந்திய அணிக்காக 48 ஒருநாள், 76 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. தற்போது கொரோனாவுக்கு தனது தாய் மற்று தங்கையை இழந்துள்ளது அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேதாவின் தாய் தேவி (67), இரு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் வேதாவின் சகோதரி வத்சலாவும் (42) கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் வேதாவின் தந்தை, சகோதரர், 2-வது சகோதரி எனப் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த வேதாவுக்குப் பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாக ஆறுதல்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து