முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்: காயத்தால் ஏற்பட்ட அனுபவத்தை நினைவுகூறும் டெஸ்ட் வீரர் புஜாரா!

சனிக்கிழமை, 8 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகத்தின் போது தனக்கு ஏற்பட்ட காயத்தால் நேர்ந்த அனுபவத்தை விவரித்துள்ளார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா. சிறப்பான ஆட்டம்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து விரும் வீரர் புஜாரா. கடந்த டிசம்பர் - ஜனவரி மாதங்களில்  நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் பூஜாரா. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட  அரை சதம் விளாசி இருந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடினமான நாட்களை நினைவு கூர்ந்துள்ளார் அவர். 

முதல் காயத்தால்...

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு எனக்கு ஏற்பட்ட  முதல் காயம் பெருத்த வருத்தத்தை கொடுத்தது. நான் காயத்திலிருந்து மீள எப்படியும் ஆறு மாதம் ஆகும் என அணியின் பிஸியோ சொல்லிவிட்டார். அதை கேட்டதும் அப்போது நான் அழுதே விட்டேன். என்னால் இனி சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற சந்தேகம் கூட எனக்கு  அப்போது எழுந்திருந்தது. 

குடும்பம்தான் பலம்

அப்போது எனக்கு எனது குடும்பம் பக்கபலமாக நின்றது. இருந்தாலும் எனக்கு அப்போது ஏற்பட்ட அழுத்தங்களால் அவர்களிடமே நான் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என சொல்லி விட்டேன். அவர்கள் என்னை நேர்மறையாக சிந்திக்கும்படி சொன்னார்கள். பின்னர் எல்லாம் சரியானது. இப்போது எப்படிப்பட்ட அழுத்தத்தையும் என்னால் கையாள முடியும்” என மைன்ட் மேட்டர்ஸ் என்ற யூடியூப் சேனல் பேட்டியில் தெரிவித்துள்ளார். 

பல்வேறு போட்டிகள்...

வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களம் காண உள்ளார் புஜாரா. இங்கிலாந்து மண்ணில் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் அவர்  விளையாடி உள்ளார். ஆங்கில மண்ணில் அவரது பேட்டிங் சராசரி 29.41. மொத்தம் 500 ரன்கள் எடுத்துள்ளார். அங்கு அவரது அதிகபட்ச ரன்கள் 132. இரண்டு அரை சதங்களும் பதிவு செய்துள்ளார். இது தவிர கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் அவருக்கு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து