முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன ராக்கெட் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்ததால் ஆபத்தும் நீங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 9 மே 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பீஜிங் : விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மாதம் 29-ம் தேதி லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திய ராக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது. 

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது. எனவே எந்த நேரமும் அந்த ராக்கெட் பாகம் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டது. 

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது. 18 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது. அதன்படி, ராக்கெட்டின் எஞ்சிய பாகம் நேற்று மாலத்திவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து