முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத்தில் அடுத்தடுத்து சோகம்: ராஜஸ்தான் அணி வீரர் சக்காரியாவின் தந்தை கொரோனாவுக்கு உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜெய்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்பால் நேற்று காலமானார். சகோதரர் தற்கொலை செய்து கொண்ட சில மாதங்களிலேயே அவரது தந்தையை இழந்துள்ளது அவருக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரிழிவு பாதிப்பு 

சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குஜராத்தின் பாவ்நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு பாதிப்பு உள்ளது. காஞ்சிபாயின் உடல்நிலை மோசமான நிலையில் வென்டிலேட்டர்  உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சகோதரர் தற்கொலை 

ஒருநாள் முன்புதான் மருத்துவமனையில் சேதன் சகாரியா தனது தந்தையின் உடல்நிலையை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சில மாதங்களுக்கு முன்பு, சேதன் சக்காரியாவின் சகோதரர் ராகுல் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது தந்தையும் இறந்துபோனது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1.2 கோடி ரூபாய்... 

எளிய குடும்பத்திலிருந்து வந்த சேதன் சகாரியா இந்த ஆண்டு நடந்த சையது முஷ்தாக் அலி டி-20 தொடரில், 5 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார். அவரது இந்தச் செயல்பாடு பிடித்துப்போக 1.2 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.  கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐபிஎல் மூலம் கிடைத்த வருவாயால்தான் தந்தைக்கு சிகிச்சையளிக்க முடிந்தது. கிரிக்கெட் ஊதியமே எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் என சக்காரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து