முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஐ.பி.எல். வீரர் வார்னர் - சிலாட்டர் மதுபாரில் சண்டை ?

ஞாயிற்றுக்கிழமை, 9 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : மாலித்தீவு சென்றடைந்த ஆஸ்திரேலிய ஐ.பி.எல். வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் சிலாட்டர்  இடையே மதுபாரில் சண்டை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா பாதிப்பு

ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேரை கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. ஐ.பி.எல். டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை எடுத்தது.

ஆஸ்திரேலியா தடை

இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேச வீரர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பி இருந்தனர். இந்திய பயணிகள் விமானத்துக்கு ஆஸ்திரேலியாவில் வருகிற 15-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு சென்றனர்...

இதனால் ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. மாலத்தீவில் அவர்கள் தனிமையில் இருந்த பிறகு தங்களது நாட்டுக்கு திரும்ப முடிவு செய்து இருந்தனர்.

வாய் தகராறு - மோதல்

இதற்கிடையே மாலத்தீவில் உள்ள மதுபாரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னரும், முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான மைக்கேல் சிலாட்டர் சண்டையிட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. முதலில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

வதந்தியான தகவல்.... 

இதை சிலாட்டர் மறுத்துள்ளார். இது முற்றிலும் வதந்தியான தகவல் என்று அவர் தெரித்துள்ளார். இது தொடர்பாக சிலாட்டர் கூறும்போது, ‘நானும் டேவிட் வார்னரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் சண்டை வருவதற்கான வாய்ப்பே இல்லை. இதுமாதிரியான தகவல் எங்கிருந்துதான் வருகிறது என்று தெரிய வில்லை’ என்றார்.

பிரதமர் மீது விம்ரசனம்

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணியின் தொடர்தோல்வியால் வார்னர் கேப்டன் பதவியை இழந்தார். வில்லியம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. டெலிவி‌ஷன் வர்ணனையாளரான சிலாட்டர் ஆஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடி இருந்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப பிரதமர் தடை விதித்ததால் அவர் கண்டனம் தெரிவித்து இருந்தார். சிலாட்டர் தான் முதலில் மாலத்தீவு சென்றார். அதன்பிறகுதான் மற்ற ஆஸ்திரேலிய குழுவினர் அங்கு சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து