முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 8,78,437 தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது : மத்திய அரசு தகவல்

திங்கட்கிழமை, 10 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒரு கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாகவும், 8,78,437 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 9,24,910 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது. இதுவரை, சுமார் 18 கோடி (17,93,57,860) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. நேற்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 16,89,27,797 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு இதுவரை 76,43,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 4.13 விழுக்காடு வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 67,64,573 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 8,78,437 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன. 

புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கு இதுவரை 3,97,130 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 0.59 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 2,17,216 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,79,914 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரிவசம் கையிருப்பில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து