முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்: அனைவரும் செலுத்திக் கொள்ள கேப்டன் விராட்கோலி அறிவுரை

திங்கட்கிழமை, 10 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தடுப்பூசிகள்... 

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. டெல்லியில் சனிக்கிழமை மட்டும் 1.28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. 

இன்ஸ்டாகிராமில்... 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்த செய்தியை அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தவான் மற்றும் ரஹானே மாதிரியான இந்திய கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து கோலியும் தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்டுள்ளார். 

கோலி வேண்டுகோள்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டெல்லியில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருக்கவும் என அவர் கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக விராட் கோலியும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்தார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து