முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்யுத்த வீரர் கொலை வழக்கு: சுஷில் குமாருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறபித்த போலீஸ்

திங்கட்கிழமை, 10 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மல்யுத்த வீரர் கொலை தொடர்பாக டெல்லி போலீஸ், 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சுஷில் குமார் தலைமறைவான நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு 

மே 6-ம் தேதி டெல்லி சத்ராசல் மைதானத்தில் ஏற்பட்ட சண்டையில்  23 வயதான இளம் மல்யுத்த வீரர் சாகர் ராணா கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சுஷில்குமார் உள்ளிட்ட மூத்த மல்யுத்த வீரர்கள் சிலர் மீது டெல்லி காவல்துறை கொலை, கடத்தல் மற்றும் குற்றச் சதி வழக்குப்பதிவு செய்துள்ளது.

லுக் அவுட்  நோட்டீஸ் 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி கூடுதல் டி.ஜி.பி குரிக்பால் சிங் சித்து “பாதிக்கப்பட்ட அனைவரின் அறிக்கைகளையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம், அவர்கள் அனைவரும் சுஷில் குமார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சுஷில் குமாரை நாங்கள் தேடி வருகிறோம், அவர் வெளிநாடுகளுக்கு தப்பாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட்  நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இரு தரப்பினர் மோதல் 

சத்ராசல் மைதானத்தில் மூத்த மல்யுத்த வீரர்களுக்கும், இளம் மல்யுத்த வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையில் இளம் வீரர் சாகர் ராணா கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் சில வீரர்கள் கைது செய்யப்பட்டனர், அவ்விடத்தில் சில துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன என போலீசார் தெரிவித்தனர். மூத்த வீரர் ஒருவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த சாகர் ராணா, வீட்டை காலி செய்ய மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது. 

எஃப்.ஐ.ஆர். பதிவு 

தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சுஷில்குமார் கூறிவந்தாலும் அவர் ஏன் தலைமறைவானார் என்பது சந்தேகங்களை கிளப்ப அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க தற்போது டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும் சுஷில் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து