முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு ரூ. 110 கோடி டுவிட்டர் நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் இந்திய மக்களுக்கு 15 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார்  ரூ. 110 கோடி) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இந்தியாவின் நிலை உலக நாடுகளுக்கே கவலையளிப்பதாக இருப்பதால், பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் தட்டுப்பாடு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. 

இதனிடையே,கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.  அந்த வகையில் கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் இந்திய மக்களுக்கு 15 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார்  ரூ. 110 கோடி) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்த தொகை கேர் ,எய்டு இந்தியா ,சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா  ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் முறையே 10 மில்லியன் டாலர் (ரூ.73.47 கோடி  ), 2.5 மில்லியன் டாலர்(ரூ,18.36 கோடி ),2.5 மில்லியன் டாலர்(ரூ.18.36 கோடி ) என மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக்பேட்ரிக் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து